நானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான் – தோனி

74

திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான் எனத் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி, நானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான் என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற தோனி தனது இல்லற வாழ்க்கை குறித்து மனந் திறந்துள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்த தோனி மேலும் கூறுகையில்,

திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான். நானும் மற்ற கணவர்களைப் போல ஒருவன் தான். என்னுடைய மனைவி என்ன விரும்புகிறாரோ அதனை செய்ய நான் அனுமதி வழங்கி விடுவேன். ஏனென்றால் என்னுடைய மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

அதேபோல் என் மனைவி கூறும் எல்லா விஷயத்திற்கும் ஓகே சொன்னால் தான் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். ஆகவே தான் நான் அவர் நினைப்பதை செய்ய விட்டுவிடுவேன். திருமண வாழ்க்கையின் முக்கிய படலமே 50 வயதிற்கு பிறகுதான். ஏனென்றால் நீங்கள் 55 வயதை கடந்து விட்டால் தான் உங்களுக்கு உண்மையாக காதல் வயது வரும். அந்த வயதில்தான் நீங்கள் உங்களுடைய வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இந்த விடயங்களை பற்றி யோசிக்க ஆரம்பிப்பீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

SHARE