கிரிக்­கெட்­டி­லி­ருந்து சிறிது காலம் விலகியிருக்கும் கிறிஸ் கெய்ல்

106

மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்­னணி துடுப்பாட்ட வீரான கிறிஸ் கெய்ல், கிரிக்­கெட்­டி­லி­ருந்து சிறிது காலம் விலகியிருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார்.

இந்­தியா – மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டையில் தலா 3 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடை­பெ­ற­வி­ருக்­கின்­றது.

இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஒரு நாள் தொடரில் கலந்து கொள்ள இயலாது. சிறிது காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்­துள்ளேன் என்று கிறிஸ் கெய்ல் தெரி­வித்­துள்ளார்.

இது­ கு­றித்து கிறிஸ் கெய்ல் கூறு­கையில், மேற்­கிந்­தியத் தீவு­களின் கிரிக் கெட் அணி யின் தேர்­வுக்­குழு,

இளை­ஞர்­க ளுடன் இணைந்து நான் விளை­யாட விரும்­பி­யது. ஆனால், நான் இந்த வருடம் முழு­வதும் கிரிக்­கெட்­டி­லி­ருந்து விலகி இருக்க விரும்­பு­கிறேன்.

மீண்டும் எப்­போது கிரிக்­கெட்­டுக்கு திரும் ­புவேன் என்­பதை உறு

­தி­யாகக் கூற முடி­யாது. பங்­க­ளாதேஷ் லீக்கில் என்னைத் தேர்வு செய்­துள்­ள னர். வீரர்கள் பட்­டி­யலில் என்­னு­டைய பெயர் எப்­படிச் சேர்ந்­தது என்று எனக்குத் தெரி­யாது’’ என்றார்.

SHARE