வெப் தொடரில் அறிமுகமாகும் தமன்னா

84
வெப் தொடரில் அறிமுகமாகும் தமன்னா
திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது.
இதனால் முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பிரசன்னா, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சமந்தா, பிரியாமணி, நித்யாமேனன், நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர்.
தமன்னாஇந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை தமன்னா, அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE