சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் இணையும் கவின்

87
சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஹீரோ படமும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது. தற்போது கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகின்றன.
எஸ்.கே.18 படக்குழுவினருடன் கவின்இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன், சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள கவின், ’நட்புனா என்னன்னு தெரியுமா’ எனும் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
SHARE