ரஷ்­யாவில் மாடுகளின் மன­ப்ப­தற்ற நிலைக்­கு மாயக்காட்சி

79

மாடுகள் மன­ப்ப­தற்ற நிலைக்­குள்­ளா­வதைக் குறைக்கும் இலக்கில் ரஷ்­யாவைச் சேர்ந்த பண்­ணை­யொன்று பொய் காட்­சி­களை மெய்த்­தோற்­றங்கள் போன்று காண்­பிக்கும்  கணி­னியால் இயக்­கப்­படும் வி.ஆர். முறை­மையைக்கொண்ட கரு­வி­களை அவற்றின் தலையில் அணி­வித்­துள்­ளது.

இந்த முறை­மை­யா­னது மாடுகள் விரும்பும் வயல் சூழல் அவற்­றுக்கு முன்­பாக இருப்­பது போன்று மாயத் தோற்­றப்­பா­டு­களைக் காட்­சிப்­ப­டுத்தி மாடுகள் மனப்பதற்ற நிலையை அடை­வதை குறைப்­ப­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மாடு­களின் மனோ­நிலைக்கும் அவை தரும் பாலின் அள­வுக்­கு­மி­டையில் தொடர்பு இருப்­பது ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக ரஷ்ய விவ­சாய மற்றும் உணவு அமைச்சு கூறு­கி­றது.

இந்­நி­லையில் அந்த அமைச்சு ராம னஸ்கி மாவட்­டத்தி­லுள்ள ரஸ்­மொ­லோகோ பண்­ணை­யி­லுள்ள மாடு­களில் இது தொடர்பில் பரி­சோ­த­னையை மேற்­கொண்­டது. இதன் போது அமை­தி­யான சூழ்நிலையில் மாடுகள் அதிகளவானதும் தரமானதுமான பாலைத்தருவது கண்டறியப்பட்டது.

SHARE