‘தளபதி 64’ படத்திற்காக கர்நாடகா சிறைக்கு செல்லும் விஜய்

93
கர்நாடகா சிறைக்கு செல்லும் விஜய்
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர்.
விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவரது இளமையான தோற்றம் கசிந்து மாணவராக நடிக்கிறார் என்று பேசினர். நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கின்றனர் என்றும் தகவல் பரவியது. கமல்ஹாசனின் நம்மவர் படத்தின் ரீமேக்காக உருவாகிறது என்றும் கூறுகிறார்கள். இந்த தகவல்கள் எதையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
விஜய்இந்த நிலையில் டெல்லியில் நடந்து வந்த படப்பிடிப்பை ஓரிரு நாளில் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் விஜய், விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ் ஆகியார் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
SHARE