லண்டன் தாக்குதலில் புகையிரத நிலைய பணியாளர்கள் காயம்

63

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

லண்டனில் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆயுதமேந்திய பொலிஸார் பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து பொதுமக்களை மீட்பதையும் பின்னர் மிக அருகிலிருந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன.

அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் பணியாளர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் நபர் ஒருவர் கைதுசெய்யப்ட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் இது பாரிய சம்பவம் என தெரிவித்துள்ளனர்.

SHARE