ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ. தே. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம்

51

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் இன்று (02) கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் யாரென்பது தொடர்பில் ஐ.தே.கவுக்குள் கடும் சர்ச்சைகள் எழுந்ததைபோன்று ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் யாரென தொடர்ந்து கருத்து முரண்பாடுகள் நிலவி வருகின்றன. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென கட்சியின் ஒரு தொகுதியினரும் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென இன்னுமொரு தொகுதியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

40 பேரின் கையொப்பத்துடன், ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசமும், 57 பேரின் கையொப்பத்துடன், சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு தெரிவித்து சஜித் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE