பலத்த மழைக் காரணமாக பல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

29

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பலத்த மழைக் காரணமாக பல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி தபோவா, ராஜங்கனை, இங்கினிமிட்டியா, தேதுரு ஓயா மற்றும் அங்கமுவா ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் காலா ஓயா மற்றும் மீ ஓயாவின் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரித்துள்ளனர்.

SHARE