மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற கொலைகளுடன் சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் கைது

70

மெக்ஸிக்கோவில் கடந்த மாதம் இடம்பெற்ற கொலைகளுடன் சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் பலரை கைதுசெய்துள்ளதாக மெக்ஸிக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி மெக்ஸிக்கோவின் சிவாவா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு குழந்தை உட்பட 9 அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்திருந்தனர்.

இந் நிலையில் இக் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட பலரை கைதுசெய்துள்ளதாக மெக்ஸிக்கோவின் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் கைதானவர்களில் அடையாளங்களோ எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர் என்ற விபத்தையே குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டவில்லை.

SHARE