13 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா கோலா­க­லமா நேபா­ளத்தின் காத்­மண்டு நகரில் ஆரம்­ப­மா­னது

73

13 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா கோலா­க­லமா நேற்று நேபா­ளத்தின் காத்­மண்டு நகரில் ஆரம்­ப­மா­னது.

கடும் குளி­ருக்கு மத்­தியில் 7 நாட்டு வீர வீராங்­க­னைகள் அணி­வகுக்க, கலை­யம்­சங்­க­ளுடன் பார்­வை­யா­ளர்­கைளப் பரவசப்­ப­டுத்த நேபாள ஜனா­தி­பதி பித்­தியா தேவி பண்­டாரி போட்டித் தொடரை உத்தி­யோ­கபூர்­வ­மாக ஆரம்­பித்து வைத்தார்.

நேபா­ளத்தில் இரண்­டா­வது தடவை­யாக நடை­பெ­றும் தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­க­ளா­னது இம்­முறை 13 ஆவது தொட­ராக அரங்­கே­றி­யுள்­ளது.

நேற்று ஆரம்­ப­மான போட்டித் தொடர் எதிர்­வரும் 10ஆம் திக­தி­ வரை காத்­மண்டு மற்றும் பொக்­காரா ஆகிய இரண்டு நகரங்­களில் நடை­பெ­று­கின்­றது. இதில் இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஸ், மாலைதீவுகள், பூட்டான் மற்றும் தொடரை நடத்தும் நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் போட்­டி­யி­டு­கின்­றன.

இதில் மொத்தம் 26 போட்­டி­களில் 1115 பதக்­கங்­க­ளுக்­காக வீரர்கள் போட்­டி­யி­டு­கின்­றனர். இதில் 317 தங்­கமும், 317 வெள்ளியும், 481 வெண்­கலப் பதக்­கங்­களும் உள்­ள­டங்­கு­கின்­றன,

இம்­மு­றைய இலங்­கை­யி­லி­ருந்து 568 வீரர்கள் தெற்­கா­சிய விளையாட்டுப் போட்­டி­களில் கலந்­து­கொள்­வதோடு, அணி விளையாட்­டுக்­கான கிரிக்கெட், காற்­பந்­தாட்டம், கரப்­பந்­தாட்டம், கபடி போன்ற விளை­யாட்­டுக்­க­ளிலும் இலங்கை அணி பங்­கேற்­கின்­றது.

நேற்று இரவு சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக போட்­டிகள் ஆரம்­ப­மா­னாலும் இன்­றே போட்­டிகள் நடைப்­பெ­ற­வுள்­ளன. இலங்கை அணி கிட்டத்தட்ட அனைத்துப் போட்­டி­க­ளிலும் பங்­கேற்கும் நிலையில் தங்கப்­ப­தக்­கங்­களை அள்ள காத்­தி­ருக்­கின்­றது. பொறுத்­தி­ருந்து பார்ப்போம் எமக்கு எத்­தனை தங்கம், எத்­தனை வெள்ளி, எத்­தனை ெவண்­கலப் பதக்­கங்கள் கிடைக்­கின்­றது என்று.

கரப்­பந்­தாட்­டத்தில் சோடை­போன இலங்கை பயிற்­சி­யா­ளர்­களை நீக்க முடிவாம்

13 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்­கேற்­றுள்ள கரப்­பந்­தாட்ட போட்­டி­களில் ஆண், பெண் இரு பிரி­வு­க­ளிலும் சொல்லிக் கொள்ளும் அள­வுக்கு திற­மையாக ஆட­வில்லை. இதனால் இலங்கை அணி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்­கங்­களை முதல் சுற்­றி­லேயே தவ­ற­விட்­டது.

சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக போட்டி விழா ஆரம்­பிப்­ப­தற்கு முன்­னமே கரப்­பந்­தாட்டப் போட்டி தொடங்­கி­யது. அதன்­படி இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மோதிய முத­லா­வது போட்­டியில் மாலை­தீ­வு­களை வீழ்த்­தின.

அதன்­ பி­ன்னர் நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான போட்­டியில் இலங்கை அணி பாகிஸ்­தா­னிடம் 3-0 என்ற புள்­ளிகள் அடிப்படையில் தோற்­றது. மூன்­றா­வது போட்­டியில் இந்­தி­யா­விடம் 3-0 என்ற செட்­களில் தோல்­வி­ கண்­டது. இத­னை­ய­டுத்து தங்கம் மற்­றும் வெண்­கலப் பதக்க கனவு பறி­போக வெண்­க­லத்­துக்­கான போட்­டியில் இலங்கை பங்­கேற்­க­வுள்­ளது.

அதேபோல் மாலை­தீ­வு­களை வீழ்த்­தி­ய இலங்கை மகளிர் அணி­யானது தமது இரண்­டா­வது போட்­டியில் நேபா­ளத்தை எதிர்­கொண்­டது. இந்தப் போட்­டியில் 3-0 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் தோல்­வி­யைத் தழு­விக்­கொண்ட இலங்கை மகளிர் அணி தங்­கப்­ப­தக்­கத்­தையும் வெள்­ளிக்­கான வாய்ப்­பையும் தவ­ற­விட்­டுள்ள நிலையில் வெண்க­ல­த்­துக்­கான போட்­டியில் கலந்­து­கொள்­ள­வுள்­ளது.

இலங்ைக கரப்­பந்­தாட்ட அணிக்கு முத­லீடு செய்­துள்ள பெறு­ம­திக்­கேற்ற பெறு­பே­றுகள் கிடைக்­க­வில்ை­ல­யென அதி­கா­ரிகள் கரு­து­கின்­றனர். கியூ­பாவின் பயிற்­சி­யா­ளர்­களை நிய­மித்து அவர்­க­ளுக்கு மாதம் நான்கு இலட்சம் ரூபா­ ஊதி­யம் வழங்­கப்­ப­டு­வ­தா­க வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­­நி­லையில் குறித்த பயிற்­சி­யா­ளர்கள் இருவர் குறித்து எதிர்­கா­லத்தில் நட­வ­டிக்ைக எடுக்க உத்­தே­சித்­துள்­ள­தா­கவும், அதற்­காக புதிய பயிற்­சி­யா­ளர்­களை நிய­மிக்­க நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் விளை­யாட்டு அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் தம்­மிக்க முத்­து­கல தெரி­வித்தார்.

நிமாலி வெளியே போனது ஏன்? விசா­ரணை நடத்த உத்­த­ரவு

இலங்கை தட­கள குழாத்தின் தலை­வி­யான 800 மீற்றர் ஓட்ட வீராங்­கனை நிமாலி லிய­னா­ரச்சி கடந்த 27ஆம் திகதி இரவு மோட்டார் சைக்­கிளில் பயணம் செய்­த­போது விபத்­துக்­குள்­ளானார்.

நேபாளம் நோக்கிப் புறப்­ப­டு­வ­தற்கு ஒரு­நா­ளுக்கு முன்பு நடந்த இந்த விபத்­தினால் நிமா­லியால் தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களில் பங்­கேற்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது. தற்­போது இது குறித்து விசாரணை நடத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இலங்கை தட­கள மொத்த குழாமும் கொழும்பு சுக­த­தாச ஹோட்­டலில் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.இந்­நி­லையில் இரவு வேளையில் எதற்­காக அவர் வெளியே சென்றார். யாரு­டைய அனு­ம­தி­யுடன் சென்றார். எதற்­காக சென்றார் என்­பது குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

வெளியே செல்ல வேண்­டிய எந்­த­வொரு அவ­சி­யமும் இல்­லாத நிலையில் நிமாலி எதற்கு சென்றார் என்ற கேள்வி எழுந்­துள்ளது. இலங்­கைக்கு தங்­கப்­ப­தக்கம் வென்று­கொ­டுக்­கூ­டிய வீராங்­க­னை­களில் மிக முக்­கிய நப­ராகப் பார்க்­கப்­படும் நிமாலி தற்­போது போட்­டியில் பங்­கேற்­காமை இலங்­கைக்கு பாரிய இழப்­பாகும்.

தரை­யி­றங்க முடி­யாமல் வானில் 1 மணி­நேரம் மேல­தி­க­மாக பறந்த விமானம்

இலங்­கை­யி­லி­ருந்து மெத்தம் 568 வீர வீராங்­க­னைகள் இம்­மு­றை நடை­பெறும் தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களில் கலந்­து­கொள்­கின்­றனர். இவர்கள் பல விமா­னங்­களில் இலங்­கை­யி­லி­ருந்து நேபாளம் வந்­த­டை­ந்தனர். இதில் கடந்த வெள்ளிக்­கி­ழமை 300 பேருடன் நேபாளம் வந்த இலங்கை விமானம் காத்­மண்டு விமான நிலை­யத்தில் தரை­யி­றக்க சமிக்ஞை கிடைக்­காததால் கிட்­டத்தட்ட 1 மணித்­தி­யா­ல­யம் வரை நேபாள வானில் பறந்­தது.

பனி­மூட்டம் அதி­க­மாக இருந்ததால் விமா­னியால் விமா­னத்தை குறித்த நேரத்தில் தரை­யி­றக்க முடி­யாமல் போனது. பின்னர் ஒரு­வ­ழி­யாக வான்­ப­ரப்பு சரி­யா­னதும் விமானம் தரை­யி­றக்­கப்­பட்­டது.

நேபா­ளத்தில் பனி மூட்டம் கார­ண­மாக தரை­யி­றக்க முடி­யாமல் பேனாது. இதேவேளை டெல்­லியில் தரை­யி­றக்க வேண்­டிய விமானம் காற்று மாசு கார­ண­மாக ஜெய்ப்­பூரில் உட­ன­டி­யாக தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் அந்த விமா­னத்தில் வந்த வீர வீராங்­கனைகள் ெபரிதும் அசெ­ளக­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாகினர்.

இதனால் பல மணி நேரங்கள் தாம­தித்து நேபா­ளத்­திற்கு வந்து சேர்ந்­தனர். அது­மட்டுமல்லாமல் வீர வீராங்­க­னை­க­ளுக்­கான முறை­யான எந்­த­வொரு ஏற்­பாடும் செய்து கொடுக்­கப்­ப­ட­வில்லை. இப்­ப­டி­யான இடை­யூ­று­க­ளுக்கு மத்­தியில் இலங்கை வீரர்கள் எப்­படி தங்­க­ளது பதக்க வேட்­டையை நடத்­தப்­போ­கி­றார்கள் என்­பதைப் பொறு­த்தி­ருந்து பார்ப்போம்.

விமான இருக்கைகளுக்கு 130 மில்­லியன் தங்­கு­மி­டத்­துக்­கான செலவு 73 மில்­லியன்

மொத்த வீர வீராங்­க­னை­க­ளுக்­கான விமான இருக்கைகளுக்­காக மாத்­திரம் 130 மில்­லி­யன்கள் வரை செலவிடப்பட்­டுள்­ளதாகவும் அத்­தோடு வீரர்­க­ளுக்­கான தங்­கு­மிட வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொள்ள நேபாள ஒலிம்பிக் சங்­கத்துக்கு 73 மில்­லியன் ரூபா இலங்கை வழங்­கி­யுள்­ளது. இதர செல­வுகள் குறித்­த தக­வல்கள் இல்­லாத நிலையில் கிட்­டத்தட்ட 200 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான பணம் செல­வி­டப்­பட்­டி­ருக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறித்த செல­வுக்­கான பிர­தி­ப­லனை இலங்கை வீர வீராங்­க­னைகள் அறு­வடை செய்து கொடுப்­பார்­களா என்­ப­துதான் பல­ரது எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

SHARE