விக்ரம்58 பட தலைப்பு இதுதான்? கசிந்த தகவல்!

65

நடிகர் சீயான் விக்ரம் கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகன் துருவ்வின் ஆதித்ய வர்மா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதனால் அவர் வேறு படம் எதுவும் நடிக்கவில்லை.

அடுத்து அவர் விரைவில் இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் புகைப்பட கலைஞராக நடிக்கிறார் என்றும், 25 கெட்டப்களுக்கு மேல் அவர் தோன்றுவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ‘அமர்’ என பெயர் வைத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தான் இந்த படத்தில் ஹீரோயின் என்றும் தெரிவித்துள்ளனர்.

SHARE