வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்

52

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் செட்டிகுளத்தில் 1984ஆம் ஆண்டு தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதை கண்டித்து  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1017 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மதியம் 1.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

செட்டிகுளத்தில் 52 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டு 35வருடங்கள் தமிழ் அரசியல் வாதிகள் ஊமையானதேனோ? நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா? மாற்று தலைமை என்போரே ஏன் நீங்கள்  இந்தியாவை தமிழர்க்கு வந்து உதவுமாறு அழைக்கவில்லை.

இன்று 1984 ஆம் ஆண்டு 52 தமிழர்கள் சிறீலங்கா இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டமை இனப்படுகொலையே! போன்ற பதாதைகளை தாங்கியவாறும் அமெரிக்கா, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

SHARE