வட்ஸ் அப்பில் Call Waiting எனும் புதிய வசதி அறிமுகம்

286

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் குறுஞ்செய்தி செயலியான வட்ஸ் அப்பில் Call Waiting எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஏற்கனவே வட்ஸ் அப் மூலம் குரல் வழி அழைப்பில் ஈடுபட்டிருக்கும்போது பிறிதொரு அழைப்பு வந்தால் தவறிய அழைப்பாகவே காண்பிக்கப்படும்.

ஆனால் புதிய வசதி மூலம் அழைப்பில் இருக்கும்போதே பிறிதொரு அழைப்பு வருவதை காண்பிக்கும்.

Call Waiting வசதியானது ஐபோன்களில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு 2.19.352 எனும் வட்ஸ் அப் பதிவினை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

இதேவேளை Call Waiting வசதியானது சாதாரண தொலைபேசி அழைப்புக்களில் ஏற்கனவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE