Lighting Port வசதி இன்றி அறிமுகமாகவுள்ள ஐபோன்கள்

149

ஐபோன்களை சார்ஜ் செய்வதற்கு முன்னர் சாதாரண Pin கொண்ட Port தரப்பட்டிருந்தது.

அதன் பின்னர் Lighting Port எனும் சிறிய ரக Port அறிமுகம் செய்யப்பட்டு தற்போது வரையிலும் பாவனையில் உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன்களில் Lighting Port உள்ளடக்கப்பட்டிருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வயர்லெஸ் முறையிலான சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையால் தொடர்ந்து வரும் ஐபோன்களையும் அவ்வாறு சார்ஜ் செய்ய முடியும்.

இதனைக் கருத்திற்கொண்டே Lighting Port வசதி நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டில் iPhone 7 மற்றும் அதன் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களில் 3.5mm Port இனையும் ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

SHARE