ஷென்சென் பகிரங்க டென்னிஸ் தொடரில் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா சம்பியன் பட்டம்

50

ஷென்சென் பகிரங்க டென்னிஸ் தொடரில், ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான பெண்களுக்கே உரித்தான ஷென்சென் பகிரங்க டென்னிஸ் தொடர், இன்றுடன் இனிதே நிறைவுப் பெற்றது.

சீனாவில் நடைபெற்றுவந்த இத்தொடரில், இன்று (சனிக்கிழமை) மகுடத்திற்கான இறுதிப் போட்டி நடைபெற்றது.

எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவும், கஸகஸ்தானின் எலெனா ரைபாகினாவும் மோதிக் கொண்டனர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-2 என எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவுக்கு எலெனா ரைபாகினா சற்று நெருக்கடி கொடுத்தார்.

எனினும், இந்த நெருக்கடிகளை திறம்பட சமாளித்த எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா, செட்டை 6-4 என கைப்பற்றி, இத்தொடரில் முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றார்.

இதுவரை பெரிதளவில் சாதிக்காத எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவுக்கு ஆண்டின் முதல் சம்பியன் பட்டம் பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது.

SHARE