குல்னா டைகஸ் அணி 92 ஓட்டங்களால் அபார வெற்றி

40

பங்களாதேஷ் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 40ஆவது லீக் போட்டியில், குல்னா டைகஸ் அணி 92 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், குல்னா டைகஸ் அணியும், குமிலா வோரியஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குமிலா வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய குல்னா டைகஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களையும், மெயிடி ஹசன் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குமிலா வோரியஸ் அணியின் பந்துவீச்சில், இர்பான் ஹொசைன் மற்றும் முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குமிலா வோரியஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் குல்னா டைகஸ் அணி 92 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, உபுல் தரங்க 32 ஓட்டங்களையும், பார்தீன் ஹசன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குல்னா டைகஸ் அணியின் பந்துவீச்சில், சஹீதுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மொஹமட் ஆமிர் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரொஃபி பிரைன்லிங் சம்சூர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 57 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 12 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குல்னா டைகஸ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவு செய்யப்பட்டார்.

0Shares
SHARE