இரட்டை வேடங்களில் யோகிபாபு

60

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தினை தொடர்ந்து சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படம் தான் டக்கர். இந்த படத்தை கப்பல் பட இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌசிக் நடிக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் யோகிபாபு தந்தை-மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SHARE