தேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரமே – கருணா அம்மான்

52

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரன் தன்னை ஒருபோதும் துரோகி என கூறவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “என்னை துரோகி என்று இறுதிவரை தலைவர் கூறவில்லை. கூறியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.

எனக்கும் தலைவருக்குமே தெரியும் என்ன பிரச்சினை என்று. இன்று பலர் அரசியற்கட்சி தலைவர்களை தேசிய தலைவர் என்று விழிக்கின்றனர். தேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரமே அது ஒரு வரலாற்று அத்தியாயம் அதை மீண்டும் உருவாக்க முடியாது. அங்கு இருந்துதான் நான் வந்தேன் இல்லையெனில் கருணாவை உங்களுக்கு தெரிந்திருக்க முடியாது” என மேலும் தெரிவித்தார்.

SHARE