இரட்டையர் பிரிவில் மீண்டும் அடியெடுத்து வைக்கும் சானியா மிர்சா

62
ஹோபர்ட் டென்னிஸ் - மீண்டும் களம் இறங்குகிறார் சானியா மிர்சா

சானியா மிர்சா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் அடியெடுத்து வைக்கிறார். குழந்தை பெற்றுக் கொண்டதால் 2 ஆண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்த சானியா மிர்சா, ஹோபர்ட் போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். கடின பயிற்சியால் தனது உடல் எடையை 26 கிலோ வரை குறைத்துள்ள சானியா கடைசியாக 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீன ஓபனில் ஆடியிருந்தார்.
இந்த போட்டியில் உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்க்கும் சானியா மிர்சா, முதல் சுற்றில் ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோ (ஜப்பான்) கூட்டணியை நாளை சந்திக்கிறார். 33 வயதான சானியா, அடுத்து வரும் ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து விளையாட திட்டமிட்டுள்ளார்.
SHARE