கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் கவுதம் காம்பிர்

64

கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் கவுதம் காம்பிர்?

மதன்லால், கவுதம் காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்து விட்டது. அவர்களுக்கு பதிலாக அடுத்த 4 ஆண்டுக்கான புதிய தேர்வு குழுவினரை தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்படுகிறது.

இந்த கமிட்டியில் 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த மதன்லால், இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் ஆகியோர் இடம்பெற இருப்பதாக பெயர் சொல்ல விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

கமிட்டியின் 3-வது உறுப்பினராக மும்பையைச் சேர்ந்த முன்னாள் வீராங்கனை சுலக்‌ஷனா நாயக் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

கவுதம் காம்பிர் எம்.பி.யாக உள்ளார். அரசியல் பதவி வகிக்கும் நபர் பிசிசிஐ-யில் பொறுப்பேற்க முடியாது என லோதா பரிந்துரை கூறுவதால் காம்பிரால் ஆலோசனைக்குழுவில் இடம் பெறுவது சந்தேகமே.

SHARE