பாகிஸ்தானில் பனிப்பொழிவால் 14 பேர் பலி

54
பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு - 14 பேர் பலி

பாகிஸ்தானில் பனிப்பொழிவு
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.
பனிப்பொழிவு காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குவெட்டா நகரில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாகாணத்தில் உள்ள வீடுகளின் மேற்பரப்பில் அதிகமான அளவில் பனி இருந்ததால் பாரம் தாங்காமல் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்தனர்.
பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
SHARE