அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் பதவியை இராஜினாமா செய்வதாக கூறிய வாசுதேவ

48

மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “ தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் மக்களுக்கு உரிய  தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

மேலும் தண்ணீர் பிரச்சினைக்கு கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாட்டினை காட்டிலும் சிறந்த செயற்றிட்டமொன்றை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அத்துடன் மக்களை மையமாகக் கொண்டே வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அது மக்களுக்கு நன்மைகளைத் தரும் வகையில் அமையும் என்றும் கோட்டபாய கூறியுள்ளார்.

அந்தவகையில் நான் இந்த அரசாங்கத்திடம் கோருவது, தண்ணீர் மற்றும் கல்விக்கு கணிசமான நிதியை ஒதுக்குங்கள் என்றுத்தான்.

அதாவது வரவு- செலவுத் திட்டத்தில்  தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான  நிதியை ஒதுக்காவிடின் இந்த அமைச்சில் நான் இருப்பது  பயனற்ற ஒன்றேயாகும்.

ஏழை மக்களுக்கு உதவ முடியாத இந்த அமைச்சில் இருப்பதை விட விலகுவதே சிறந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE