இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 23பேர் காயம்

30

கினிகத்தேனை- தியகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயடைந்த 23 பேரும் வட்டவளை வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹற்றன் கண்டி பிரதான வீதியில் ஹற்றனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து கண்டியிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற பேருந்து கினிகத்தேனை- தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் 11பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் 6 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் நான்கு பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE