தமிழ்ப் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டதாக நினைக்கவில்லை – மாதவன்

49
தமிழில் நடிப்பதை ஏன் குறைத்துவிட்டீர்கள்? - மாதவன் பதில்
நடிகர் மாதவன் சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ‘தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டீர்களா’ என்ற கேள்விக்கு மாதவன், “தமிழ்ப் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டதாக நினைக்கவில்லை.
‘விக்ரம் வேதா’ திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. மக்களுக்கு எந்த மாதிரியான கதைகள் பிடிக்கும் என்பதை தேர்வு செய்து நடிக்கிறேன். ஏனென்றால் அது ஒரு பெரிய பொறுப்பு. குடும்பத்தோடு வண்டியில் ஏறி தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்போது அவர்களை கடுப்பு ஏற்றாமல் வீட்டுக்கு அனுப்புவது ஒரு சவால்.
மாதவன்‘இறுதிச்சுற்று’, ’விக்ரம் வேதா’ மாதிரியான கதைகள் எழுதுபவர்கள் குறைவாக இருக்கிறார்கள். மேலும், நான் இயக்கி வரும் ‘ராக்கெட்ரி’ படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறேன். அது இந்த ஆண்டு வெளியாகும்” என்று பதிலளித்தார். டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் மற்றும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் உள்ளிட்டவை குறித்த கேள்விகளுக்கு ‘இது அதற்கான இடமல்ல’ என்று கூறி மறுத்துவிட்டார்.
SHARE