புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

195
ப்ளூடூத் 5.0 வசதியுடன் நாய்ஸ் ஷாட்ஸ் XO வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

நாய்ஸ் ஷாட்ஸ் XO
அணியக்கூடிய சாதனங்களுக்கு பெயர் பெற்ற நாய்ஸ் பிராண்டு இந்திய சந்தையில் நாய்ஸ் ஷாட்ஸ் XO பெயரில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5.0, குவால்காம் ஆப்ட் எக்ஸ் தொழில்நுட்பம், நாய்ஸ் கேன்சலேஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் IPX7 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
நாய்ஸ் ஷாட்ஸ் XO
நாய்ஸ் ஷாட்ஸ் XO சிறப்பம்சங்கள்
ப்ளூடூத் 5.0 மற்றும் குவால்காம் ஆப்ட்எக்ஸ் கொண்ட நாய்ஸ் கேன்சலேஷன் வசதி
ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்கள்
வாட்டர் ரெசிஸ்டண்ட் IPX7
வட்ட வடிவம் கொண்ட சார்ஜிங் கேஸ் மற்றும் மெட்டாலிக் ஃபினிஷ்
கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டண்ட்
40 எம்.ஏ.ஹெச். பேட்டரி
யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட்
நாய்ஸ் ஷாட்ஸ் XO ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்டு மற்றும் மெட்டாலிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
SHARE