அஜித்தை டார்கெட் செய்த விஜய் சேதுபதி

64
விஜய் சேதுபதியின் அடுத்த டார்கெட் அஜித்

விஜய் சேதுபதி, அஜித்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் நடித்துள்ள மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் போன்ற அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் சில படங்களில் நடிக்கிறார். அந்த வகையில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து பாராட்டை பெற்றார்.
விஜய் சேதுபதி, அஜித்தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் அஜித்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
SHARE