ரி-20 ‘சூப்பர் ஓவர்’ புதிய விதிமுறையை வெளியிட்ட ஐ.சி.சி.

88

சர்வதேச ரி-20 கிரிக்கெட் போட்டி சமனிலையில் முடிந்தால் சூப்பர் ஓவரில் கடைபிடிக்கப்படும் புதிய விதிமுறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

இதனால் வெற்றியைத் தீர்மானிக்க ‘சூப்பர் ஓவர்’ முறை கடைபிடிக்கப்பட்டது.

ஆனால், சூப்பர் ஓவரும் சமனிலையில் முடிந்ததால் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஐ.சி.சி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. ஆகவே தற்போது விதிமுறைகளை மாற்றியுள்ளது. ரி-20 போட்டிகளுக்கும் மாற்றியுள்ளது.

ரி-20 க்கான புதிய விதிமுறைகள் தென்னாபிரிக்கா – இங்கிலாந்து, தென்னாபிரிக்கா – அஸ்திரேலியா தொடரில் அறிமுகப்படுத்த இருக்கிறன.

தற்போது அந்த விதிகள் எவை எனப்பார்க்கலாம்.

1. போட்டி சமனிலையில் முடிவடைந்தால் ‘சூப்பர் ஓவர்’ விளையாடப்படும். சூப்பர் ஓவரும் சமனிலையானால், தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும்.

2. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும்

3. ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு மீள் மதிப்பீடு (ரிவியூ) வாய்ப்பு வழங்கப்படும்.

4. சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.

5. போட்டியில் 2ஆவதாக துடுப்பெடுத்தாடிய அணி சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாட்டம் செய்யும்.

6. முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்யும் அணி பந்தை தேர்வு செய்யலாம். 2 ஆவதாக களத்தடுப்பு செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம். பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டி நடைபெறும் சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

7. களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்களின் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று இருக்கும்.

8. சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள். இவையே புதிய ஐ.சி.சி. விதிகளாகும்.

SHARE