தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றவாளி என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக தகவள்

40

வங்கிக் கடன் மோசடியில் தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றவாளி என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக லண்டன் நீதிமன்றத்தில்  இந்தியா தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையா குறித்த வழக்கு விசாரணை நேற்று (புதன்கிழமை) லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  விஜய் மல்லையா சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் பல குளறுபடிகள் உள்ளதாகவும் அந்த உத்தரவு முழுமையும் தவறானது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கிங்பிணர் விவகாரத்தில் விஜய் மல்லையா மீதான குற்றச்சாட்டுளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இருப்பதாக  தெரிவித்தார்.

இது குறித்து வழக்கு விசாரணை இன்றும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் விஜய் மல்லையா மீது 9000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி செய்ததாக சி.பி.ஐ.யும்,  அமுலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அவர் பிரித்தானியாவுக்கு தப்பி சென்றார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE