ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

48

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

இதன்படி, தற்போது இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையை பார்க்கலாம்.

1.இந்த பட்டியலில், இந்தியக் கிரிக்கெட் அணியின் விராட் கோஹ்லி 869 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
2.இந்தியக் கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரரான ரோஹித் சர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாவது உள்ளார்.
3.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பாபர் அசாம், 829 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
4.நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ரோஸ் டெய்லர் ஒரு இடம் ஏற்றம் கண்டு 828 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
5.தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பாப் டு பிளெஸிஸ் ஒரு இடம் சரிந்து 803 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
6.அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் டேவிட் வோர்னர் 796 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இடத்தில் உள்ளார்.
7.தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் குயிண்டன் டி கொக் இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 782 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
8.நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேன் வில்லியம்சன் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு, 773 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
9.இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோ ரூட் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு, 770 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
10. அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ், 769 புள்ளிகளுடன் தொடர்ந்தும் பத்தாவது இடத்தில் உள்ளார்.

அடுத்தாக ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையை பார்க்கலாம்.

1.நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ட்ரென்ட் போல்ட் ஒரு இடம் ஏற்றம் கண்டு 727 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
2.இந்தியக் கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரிட் பும்ரா, ஒரு இடம் சரிந்து 719 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
3.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முஜிப் உர் ரஹ்மான் 701 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
4.தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் கார்கிஸோ ரபாடா, 674 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
5.அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பெட் கம்மின்ஸ், 673 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
6.இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கிறிஸ் வோக்ஸ், 659 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
7.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மொஹமட் ஆமிர், 656 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.
8.அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் மிட்செல் ஸ்டார்க், இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 645 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.
9.நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் மெட் ஹென்ரி, ஒரு இடம் சரிந்து 643 புள்ளிகளுடன் எட்டாவது ஒன்பதாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
10. நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரரான லொக்கி பெர்குசன், ஒரு இடம் சரிந்து 638 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்

SHARE