அரச நிதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்கள் இந்தியா செல்லவில்லை-பந்துல குணவர்தன

83

அரச நிதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்கள் இந்தியா செல்லவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது ராஜபக்ஷவின் மகன் மற்றும் மருமகள் சமீபத்தில் இந்தியாவுக்கு அரசாங்க தரப்பு குழுவுடன் சென்றமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி அரசாங்க தூதுக்குழுவுடன் யார் வேண்டுமானாலும் வெளிநாடு செல்லலாம் என கூறினார்.

மேலும் ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் அரச நிதியைப் பயன்படுத்தி இந்தியாவுக்குச் சென்றதாக தான் நம்பவில்லை என கூறினார்.

செலவீனங்களை குறைப்பதற்காக அரச நிதியைப் பயன்படுத்தி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதை அரசாங்கம் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

SHARE