கொரோனா வைரஸ் காரணமாக சிங்கப்பூருக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளினால் பயண எச்சரிக்கை

67

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூருக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் சிங்கப்பூரில் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் சிங்கப்பூரிலுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை அமைதியாக செயற்படுமாறு சிங்கப்பூரிலுள்ள இந்தோனேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூருக்கான பயணத் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும் சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசியப் பிரஜைகள் மீண்டும் இந்தோனேசியாவுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக சிங்கப்பூர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அங்கு தற்போது செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE