இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்வு

58

இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைக் கருத்திற்கொண்டே ரஷ்யா இவ்வாறு ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மாசற்ற எரிசக்திக்கு ஆதரவளிப்பதால் நீண்டகால நவடிக்கை ஊடாகவே இவ்வாறான திட்டம் நடைமுறைப்படுத்த சாத்தியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று இலங்கையில் அணுசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு அரசாங்களுக்கும் இடையிலான ஒற்றுமையையும், பொருளாதார வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு இலங்கையில் அணுமின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கைக்கான ரஷ்ய தூதர் யூரி மெட்டேரி தெரிவித்துள்ளார்

SHARE