ஹற்றன் சிங்கமலை காட்டுப்பகுதியில் விசமிகளால் இன்று (வியாழக்கிழமை) வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காடு எரிந்து சாம்பலாகியுள்ளது.

51

ஹற்றன் பகுதிக்கான பிரதான குடிநீர் பிறப்பிடமான ஹற்றன் சிங்கமலை காட்டுப்பகுதியில் விசமிகளால் இன்று (வியாழக்கிழமை) வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காடு எரிந்து சாம்பலாகியுள்ளது.

இந்நிலையில் கற்றனில் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், தீயினால் எமது நாட்டுக்கே உரியதான அரிய வகை தாவரங்கள், வன வலங்குகள், உயிரினங்கள் உட்பட மருந்து மூலிகைகள் ஆகியனவும் அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது வறட்சியான காலநிலை மலையகப் பகுதியில் நிலவி வருவதனால் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. எனவே காடுகளுக்குத் தீ வைப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலையகத்தில் காணப்படும் காட்டு வளம் தொடர்ந்தும் அழிக்கப்படுவதனால் காட்டுப்பகுதியில் வாழும் மிருகங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுகின்றன.

எனவே இதுகுறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்குமாரும், சூழல் பாதுகாப்பாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் ஹற்றன், பொகவந்தலாவ, வட்டவளை, எல்ல, கண்டி, இறம்பொடை உட்பட 7 இடங்களில் இவ்வாறு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE