விளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன் – சாய்பல்லவி

74
விளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன்? - சாய்பல்லவி விளக்கம்

சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்காமல்போனது ஏன்?’ என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‘அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் 3 சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கு இல்லை. என்னை சுற்றியிருப்பவர்களின் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான்.
சாய் பல்லவி‘தோல் நிறம் பற்றி சிலர் பேசுகிறார்கள். வெளிநாட்டினரிடம் சென்று நீங்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள், அப்படியிருந்தால் அதனால் கேன்சர் வரும் என்று கூற முடியுமா? அது அவர்களுடைய நிறம் அவ்வளவுதான்’ என்றார். ஏற்கனவே சாய்பல்லவி ரூ.1 கோடி சம்பளத்துடன் வந்த ஆடை விளம்பர வாய்ப்பிலும் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE