கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடித்த திரிஷா

83
ராங்கி படத்திற்காக திரிஷாவின் அர்ப்பணிப்பு

திரிஷா
96, பேட்ட படங்களுக்கு பிறகு ராங்கி, பரமபத விளையாட்டு, பொன்னியின் செல்வன், சுகர் என பல படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இதில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கியுள்ள ராங்கி படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை வசனம் எழுதியிருக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்றது.
ராங்கி படக்குழுவினருடன் திரிஷாஅங்கு மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர் உள்ளது. இருப்பினும் அதிகாலை படப்பிடிப்பு என்றால்கூட எதையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து திரிஷா நடித்துள்ளாராம். அதோடு உஸ்பெகிஸ்தானில் தான் எடுத்துக்கொண்ட செல்பிக்களையும் வெளியிட்டுள்ளார்.
SHARE