மணிரத்னம் படத்தில் நடிக்கும் சிம்பு

101
மாநாட்டுக்கு பின் மணிரத்னம் படத்தில் சிம்பு?

மணிரத்னம், சிம்பு
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
மணிரத்னம், சிம்புமுதல் பாகம் இந்தாண்டுக்குள் எடுத்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட உள்ளனர். மேலும் முதல் பாகத்திற்கு பின் சிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
SHARE