முடிவுக்கு வந்த ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டம்

65

கொழும்பில் அதிபர், அசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

குறித்த போராட்டம் காரணமாக கொழும்பின் ஓல்கோட் மாவத்தை வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஓல்கொட் மாவத்தை வீதியூடான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE