அரசாங்கம் உரிய  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது – மஹிந்த ராஜபக்

79

பாடசாலை மாணவர்களின் கல்வியினை சீர்குலைக்கும் போதைப்பொருள் பாவனையினை முற்றாக இல்லாதொழிக்க   அரசாங்கம் உரிய  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

இன்று (வெள்ளிக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெற்ற புலமைபரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பிரஜைகளின் குழந்தைகளை கவனிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பாடசாலை மாணவர்களின் கல்வியினை சீர்குலைப்பதில்  போதைப்பொருள் பாவனையும் முக்கிய பங்கு வகின்றது.

இதனால் அதனை முழுமையாக நிறைவுக்கு கொண்டுவர நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

எனவே  இந்த செயற்பாட்டுக்கு  பாடசாலை  மாணவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் மாணவர்களின்  நலன்  கருதி அரசாங்கம்  வழங்கும் புலமைபரிசில்களை மாணவர்கள் பயனுடையதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE