புதிய சின்னத்தில் போட்டியிடப்போவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு

74

கிழக்கிலும் வடக்கிலும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியானது ஒரு புதிய சின்னத்தில் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினரது திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளிதரன்  மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தலுக்கான அதிகாரபூர்வமான வேலைத்திட்டங்களை திருகோணமலை மாவட்டத்தில் இன்றிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து அதனூடாக எதிர்வரும் தேர்தலில் களமிறங்க வேண்டுமென்பதே எங்களது எதிர்ப்பார்ப்பாகும்.

அதாவது கிழக்குத் தமிழர் ஒன்றியம் எனும் அமைப்பினை உருவாக்கி அதனூடாக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பான அனைத்து வேலைத்திட்டங்களையும் எமது கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது.

தமிழ் மக்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக மிகுந்த விரக்தியில் இருக்கின்றனர். அதற்கான மாற்றுசக்தியை உருவாக்கி அதனூடாக மக்களது உரிமைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

SHARE