மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

46

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கடந்த அபிவிருத்திக்குழுவின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு போரதீவுப்பற்று தவிசாளர் யோ.ரஜனியினால் முன்வைக்கப்பட்ட திருத்ததுடன், கூட்டறிக்கை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு அபிவிருத்திக்கென 822 திட்டங்களுக்கு 1040 மில்லியன் ரூபாயினை அரசாங்கம் ஐந்து செயற்றிட்டங்கள் ஊடாக வழங்கியுள்ளது தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்துடன் கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 10400 மில்லியன் ரூபாயில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் முடிவுறுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

SHARE