வடமேல், மேல் மாகாணங்களில் அதிக வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை.

17

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடமேல், மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலேயே இவ்வாறு வெப்பநிலை உயர் நிலையில் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதிகமாக நீர் அருந்துமாறும் அறிவுறுத்தியுள்ளது

SHARE