1100 சாவு – 22300 தொற்று – அழிவின் வளிம்பில் பிரான்சுமா?

56

இன்று பிரான்சில் கொரோனா வைரசினால் சாவடைந்தோர்  கொகையானது 240 பேரினால் அதிகரித்து, 1100 பேராக அதிகரித்துள்ளது. இந்தத் தகவலைத் சுகாதாரத்துறை தலைமை அதிகாரி ஜெரோம் சாலமொன் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய்க்கு உள்ளானவர்கள் 2,448 பேரினால் அதிகரித்து 22,304 ஆக அதிகரித்துள்ளது.
அவசரசிகிச்சைப் பிரிவில் இருப்போர் தொகையானது 24 மணிநேரத்திற்குள் 240 இனால் அதிகரித்து 2516 நோயாளிகளாக அதிகரித்துள்ளது.
பிரான்சில் மொத்தமாக 10,176 கொரோனா நோயளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகத்தில் மொத்தமாக நான்கு இலட்சத்திற்கும் மேலானவர்கள் இந்தக் கொரோனா தொற்றிற்கு ஆளாகி உள்ளனர்.
மிகவிரைவாக அதிகரித்து வரும் தொற்றும், சாவுகளும் பிரான்சினை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு செல்லாமல் இருக்கப் பொறுப்புடன் உள்ளிருப்பை அனைவரும் தொடர வேண்டும்.
SHARE