பிணை பெறமுடியாதவர்களையும் விடுவிப்பதற்கான வழியைக் கண்டறிய குழு

29

சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும், பிணை பெறமுடியாதவர்களையும் விடுவிப்பதற்கான வழியைக் கண்டறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய குற்றங்களைச் செய்த கைதிகளுக்கு சட்டரீதியான நிவாரணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளின் ஆணையாளர் ஜெனரல் ஜெயசிறி தென்னகோன், துணை ஆணையர் வேணுரா குணவர்தன, பி.ஏ.எஸ்.எல் கலிங்க இந்ததிஸ்ஸா, செயலாளர் கௌசல்யா நவரத்ன, ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகார இயக்குநர் ஜெனரல் ஹரிகுபா ரோஹனாதீரா, ஜனாதிபதி செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா மற்றும் சட்டத்தரணி சுசாரா டானியல் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE