நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது – நிவேதா பெத்துராஜ்

31

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் அது அதிகமாகப் பரவுகிறது.

இந்தியாவில் கட்டுக்குள் வைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 21 நாள் ஊரடங்கால் மக்கள் வெளியில் நடமாடாமல் இருக்கிறார்கள்.

யாரும் வீட்டை விட்டு வெளிவரக் கூடாது என பல பிரபலங்கள் வீடியோக்களையும், சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், “நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதில் ஒன்றாக இருப்போம். உங்களையும், உங்கள் அன்பானவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டே இருந்திருப்பீர்கள். இந்த பூமி உங்களுக்கு ஒரு ஓய்வைக் கொடுத்திருக்கிறது.

இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மீது அதிக அன்பைக் காட்டுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்,” என்று கூறியுள்ளார்.

SHARE