வவுணதீவில் காட்டு யானை தாக்குதலில் 25 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் காட்டு யானைகள் நடத்திய தாக்குதலில் 6 கிராமங்களில் உள்ள 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.

காட்டு யானை தாக்குதலில் வீடுகள் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளன.

அதேவேளை காட்டு யானைகளில் தாக்குதல் காரணமாக பல விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளன.

தமது கிராமங்களில் காட்டு யானைகளில் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே வவுணதீவு குளத்திற்கு அருகில் உயிரிழந்த யானை ஒன்றின் சடலத்தை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்த யானை இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.