உயிரைக் குடிக்கும் கருக்கலைப்பு… கருக்கலைப்பினால் ஏற்படக்கூடிய சில பின் விளைவுகள் குறித்து பெண்கள் கவனமாக இருத்தல் அவசியம்

194
திருமணம் முடிந்து முதல் கரு உண்டாகும் தம்பதியர் பல கனவுகளோடு குழந்தையின் வருகையை எதிர் நோக்கும் காலம் கடந்து விட்டது.இன்று பல்வேறு கடமைகளுக்குப் பிறகே குழந்தை என்று தம்பதியர் இருவருமே உறுதியாக இருக்கிறார்கள்…

உயிரைக் குடிக்கும் கருக்கலைப்பு...

தாய்மை என்பது வரம். இயற்கை பெண்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கும் பெரும் பேறு. உயிர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஆச்சர்யமான நிகழ்வை கொண்டாட வேண்டிய பெண்களின் காலம் மெல்ல மெல்ல தேய்ந்துவருகிறது.  ஒன்று கருத்தரிப்பதில் பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். அல்லது கருக்கலைப்பில் ஈடுபட்டு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். அதனால் இயல்பாக தாய்மையடையும் பெண்களின் சதவீதம் குறைந்து வருகிறது என்பதை ஆய்வுகளும் நிரூபித்துவருகிறது.

இன்று ஆயிரம் கர்ப்பிணிகளில் 13 பெண்களுக்கு கருக்கலைப்பு நிகழ்ந்து விடுகிறது. இதில் வருத்தம் தரக்கூடிய விஷயம் 5 பெண்களுக்கு இயற்கையாகவே உடல் பலவீனம், சத்து குறைபாடு, அதிக அயர்ச்சி, கர்ப்பப்பை குறைபாடு போன்ற காரணங்களால் கருக்கலைப்பு நிகழ்கிறது. எஞ்சி யிருக்கும் 8 பெண்களும் தாங்களாகவே கருக்கலைப்பு செய்துகொள்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் அபார்ஷன் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதில் திருமணமான பெண்களை விட திருமணமாகாத இளம்பெண்களே அதிகம் என்பது அதிர்ச்சியளிக்கிறது இது ஒருபுறம் இருக்க, இயல்பாக இயற்கையாக கருக்கலைப்பு நிகழ்ந்து விடும் பெண்களுக்கு உரிய சிகிச்சைகளை மகப்பேறு மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.எனினும் இவை அவர்களது வருங்காலத்தில் ஆரோக்யம் சம்பந்தமான பிரச்னைகளை சமயங்களில் சிலருக்கு உண்டாக்கிவிடுகிறது என்கிறார்கள் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள்.

திருமணம் முடிந்து முதல் கரு உண்டாகும் தம்பதியர் பல கனவுகளோடு குழந்தையின் வருகையை எதிர் நோக்கும் காலம் கடந்துவிட்டது.இன்று பல்வேறு கடமைகளுக்குப் பிறகே குழந்தை என்று தம்பதியர் இருவருமே உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் கருத்தரிக்கும் போது இப் போதைக்கு இந்தக் குழந்தை வேண்டாம் என்று சொல்லுபவர்களுக்கு எப்போதுமே குழந்தை வாய்ப்பு கிட்டாமல் போகவும் வாய்ப்புண்டு.

கருக்கலைப்பு அடிக்கடி செய்யும் பெண்கள் தொற்று நோய் கிருமியால் பாதிக்கப்படுகிறார்கள் சில நேரங்களில் அதிகப்படியான இரத்தப்போக்கு உண்டாகிறது. கருக்கலைக்காமல் இருக்க கரு உண்டாகாமல் காக்க கருத்தடை மாத்திரைகள் உண்டு. ஆனால் இவற்றில் ஹார்மோன்கள் அதி கம் உண்டு என்பதால் இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் பெண்கள் உடல் பருமன், மன உளைச்சல், அதிக இடைப்பட்ட உதிரப்போக்கு போன்ற வற்றால் பாதிக்கப்படுகிறார்கள். சிலருக்கு  புற்றுநொய் வருவதற்கும் வாய்ப்புண்டு.

காப்பர் டி பயன்படுத்தினாலும் கரு உண்டாகாது என்பதால் கருக்கலைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பார்கள். ஆனால் இதுவும் சிலருக்கு ஒவ்வா மையை உண்டாக்கும். அதிகப்படியான இரத்தப்போக்கு, வலி, கிருமித்தொற்றுகள் உண்டாகும். சிலருக்கு உடல் எடை கூடவும் வாய்ப்புண்டு என்பதால் காப்பர் டி எப்போதும் சரியான தீர்வு அல்ல. மருத்துவரின் அறிவுரைப்படி காப்பர் டி பயன்படுத்தினாலும் உரிய முறையில் அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டால் விபரீதங்களிலிருந்து தப்பிக்கலாம்.

சிலர் கருவை கலைக்க மாத்திரைகளைப் பயன்படுத்துவார்கள். வீரியமிக்க கருக்கலைப்பு மாத்திரைகள் கருவைக் கலைத்தாலும்  மருத்துவர்க ளின் அனுமதியின்றி முறையாக எடுக்கப்படாத மாத்திரைகளால் கரு முழுமையாக கலையாது. இதனால் இரத்தப்போக்கு அதிகமாகும். கருவின் மிச்சம் கர்ப்பப்பையில் தங்கி நோய்த்தொற்றுகளை உண்டாக்கிவிடும். சமயங்களில் அதிக இரத்தப்போக்கை உண்டாக்கி உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கிவிடும்.

கருக்கலைக்க செல்லும் பெண்கள் மருத்துவர்களிடம் செல்லும் போது சரியான எண்ணிக்கையில் நாள்களைக் குறிப்பிட வேண்டும். கருத்தங்கி குறைந்த நாள்கள் மட்டுமே (8 வாரங்கள் வரை) கொண்டிருந்தால் மட்டுமே கருக்கலைப்பு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.நாள்பட்ட கருக் கலைப்பு என்றால் மருத்துவர்கள் முதலில் கரு கருக்குழாயில் இருக்கிறதா கருப்பைக்குள் இருக்கிறதா  என்பதை உறுதி செய்து கருகலைப்பு சிகிச்சையில் ஈடுபடுவார்கள்.

கர்ப்பப்பைக்கு வெளியே கரு இருந்தால் மாத்திரைகளால் அழிக்க முடியாது. அப்படியே எடுத்து கொண்டாலும்  சினைப்பையிலிருந்து கருப் பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து சிலருக்கு உயிரையும் போக்கும் ஆபத்துகளை ஏற்படுத்திவிடும். அதனால் கருக்கலைப்பு மாத்தி ரைகளை மருத்துவர்களின் பரிந்துரையோடு  எடுத்துக்கொள்வதே நல்லது.  சிலர் முதல் கருக்கலைப்பின் போது மருத்துவர் கொடுத்த மாத்திரைகளையே பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறானது.

கருத்தடை, கருக்கலைப்பு இரண்டுக்குமான மாத்திரைகளை மருத்துவரின் அனுமதியின்றி எடுக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. இயன்றவரை முதல் குழந்தையை கருக்கலைப்பு செய்யாமல் இருப்பது மேலும் நல்லது.

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்
பொதுவாக கருக்கலைப்பு செய்தால், பெண்களின் மனநிலை மட்டுமின்றி, உடல் நிலையும் பாதிக்கப்படும். கருக்கலைப்பு செய்வதால், அதனை பெண்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவு தான் முடிவு எடுத்து கருக்கலைப்பு செய்தாலும், அதனை பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் என்பது தெரியும். ஆனால் இன்னும் நிறைய பிரச்சனைகள் மற்றும் மாற்றங்களை பெண்கள் சந்திப்பார்கள்.

* கருக்கலைப்பு செய்தால், மார்பகங்கள் வீங்கவோ அல்லது தளர்ந்தோ இருக்கும். எனவே சிறிது நாட்களுக்கு தளர்வான பிரா அணிய வேண்டும்.

* கருக்கலைப்பு செய்த பின்னர், தொடர்ந்து 1-2 வாரங்களுக்கு இரத்தப்போக்கு அதிகம் இருக்கும். அதுமட்டுமின்றி, இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது வெளியேற்றப்படுவதால், அவை கடுமையான வயிற்றுப் பிடிப்புக்களை ஏற்படுத்தும்.

* கருக்கலைப்பிற்கு பின், அவ்வப்போது லேசான இரத்தப்போக்கு ஏற்படும். அத்துடன் கடுமையான வயிற்று வலியையும் சந்திக்கக்கூடும்.

* சில பெண்களுக்கு கருக்கலைப்பிற்கு பின் உடல் பருமனடையும். இருப்பினும் சில பெண்களுக்கு மன இறுக்கத்தினால், சரியாக சாப்பிட முடியாமல், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இவை அனைத்தும் பெண்களின் மனநிலையைப் பொறுத்தது.

* கருக்கலைப்பிற்கு பின் பெண்கள் கடுமையான முதுகு வலியை சந்திப்பார்கள். மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்தால், வலியானது இன்னும் அதிகரித்து, நிலைமையை மோசமாக்கிவிடும்.

* கருக்கலைப்பினால் கருப்பை வாயானது புண்ணாக இருப்பதால், அப்போது உடலுறவில் ஈடுபட்டால், கடுமையான வலியை சந்திக்கக்கூடும். எனவே கருக்கலைப்பிற்கு பின் 3 வாரத்திற்கு உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

* கருக்கலைப்பிற்கு பின் உடலில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால், மருத்துவர்கள் இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பார்கள். இப்படி இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை எடுக்கும் போது, அவை மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

* கருக்கலைப்பிற்கு பின்பு ப்ரௌன் நிற கசிவுகள் பிறப்புறுப்பின் வழியாக அதிகம் வெளியேறும். இதற்கு முக்கிய காரணம், கருக்கலைப்பிற்கு பின் உடலானது தானாக சுத்தம் செய்ய ஆரம்பிக்கும். அப்படி ஆரம்பிப்பதால் வெளியேறுவதாகும். ஆனால் இந்த கசிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசும் போது, கடுமையான காய்ச்சலால் அவஸ்தைப்படக்கூடும்.

* கருக்கலைப்பு செய்த பின்னர், அடிவயிறானது உப்புசத்துடன் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இரத்தப்போக்கு மட்டுமின்றி, ஹார்மோன் மாற்றங்களும் தான்.

* கருக்கலைப்பை தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் ஓவுலேசன் சுழற்சியானது ஆரம்பித்துவிடும். சிலருக்கு 4-8 வாரங்களுக்குள் மாதவிடாய் சுழற்சியானது ஆரம்பமாகி விடும்.

SHARE