ஜனநாயகத்தைப் பாதுகாக்க தேர்தலை நடத்துவது அவசியம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

27

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த தொற்றுநோய் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் சகல அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன. முப்பது முதல் ஐம்பது சதவீத பணியாளர்கள் கடமைகளுக்கு சமூகமளித்துள்ளனர்.

தற்போது கடற்படைவீரர்கள் மத்தியிலான வைரஸ் பரவல் மாத்திரமே உள்ளது. இதனையும் கட்டுப்படுத்தியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

அமரபுர நிக்காய என்ற பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் அக்க-மஹா பண்டித்த சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் சுகநலன்களை விசாரிப்பதற்காக கல்கிஸ்ஸ ஸ்ரீ தர்மபால-ராமயவிற்கு சென்றபோது பிரதமர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் தொடர்பில் பிரதமர் கருத்து தெரிவிக்கையில் தேர்தலை நடத்துவது பற்றி நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க தேர்தலை நடத்துவது அவசியமெனவும் இதன்போது தெரிவித்தார்.

SHARE