மட்டக்களப்பு – வாழைச்சேனையில் தீப்பற்றி எரிந்த நான்கு ஏக்கர் காடு

19

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா பிரதேசத்தில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீப்பற்றி எரிந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

பாசிக்குடா முருகன் ஆலய வீதியிலுள்ள அரச காணியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா கிராம சேவை அதிகாரி க.கிருஷ்ணகாந் தெரிவித்தார்.

கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மட்டக்களப்பு மாநகர தீயணைப்பு படையினர், கல்குடா பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

குறித்த தீ பரவல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE