சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த அமெரிக்கா

23
இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் சீனா ஈடுபடுகிறது- அமெரிக்கா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து சீனா மீது அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் இந்தியா உள்பட அண்டை நாடுகளிடம் சீனா எல்லை பிரச்சினைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறும்போது, “சீனா, இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் ஆத்திரமூட்டும் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் எல்லையில் அத்துமீறி செயல்பட்டு வருகிறது.

மஞ்சள் கடல், மேற்கு மற்றும் தெற்கு சீன கடல் பகுதி, தைவான் மற்றும் இந்திய எல்லைகளில் அத்துமீறி செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. இந்திய எல்லை பகுதியில் சீனா தொந்தரவு செய்து வருவதாக தெற்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க மூத்த அதிகாரி ஆலீஸ் வெல்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா-சீனா இடையிலேயான எல்லை பிரச்சினையில் அமெரிக்கா கருத்துகள் தெரிவிப்பது முட்டாள்தனமாக செயல் என்றும், நாங்களே சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும், இதில் அமெரிக்கா தலையிட அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

SHARE